Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுச்சேரி பெண்ணிடம் நூதனமாக 13 லட்சம் திருடிய நைஜீரியர்கள்!

Advertiesment
புதுச்சேரி பெண்ணிடம் நூதனமாக 13 லட்சம் திருடிய நைஜீரியர்கள்!
, செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:16 IST)
புதுச்சேரியை சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் முகநூல் மூலமாக அறிமுகமாகி சுமார் 13 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளனர்.

புதுச்சேரியில் வசித்து வரும் மனோகரன் டைல்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரின் மனைவி ஜெயந்திக்கு முகநூல் போலிக் கணக்கு மூலமாக எரிக்வால்வர் என்ற பெயரி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். அவர்களுக்குள் பழக்கம் அதிகமானதை அடுத்து ஜெயந்தி குழந்தை பிறந்தநாளுக்கு தான் அதி விலையுயர்ந்த நகைகளை பரிசாக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாக ஜெயந்திக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் ‘உங்கள் பெயரில் விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பார்சல் வந்துள்ளது. அதற்கான அபராதத்தைக் கட்டினால் பார்சல்கள் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதை நம்பி ஜெயந்தியும் 13 லட்சம் ரூபாயை ஆன்லைன் வழியாகக் கட்டியுள்ளார்.

ஆனால் சொன்னபடி பார்சல் வராததால் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை ஜெயந்தி உணர்ந்துள்ளார். இதையடுத்து அவர் சைபர் க்ரைம் போலிஸுக்கு தகவல் அளிக்க, டெல்லி விரைந்த போலிஸார் இஷிகோ பேட்ரிக் மற்றும் ஆண்டனி ஆகிய இரு நைஜீரியர்களைக் கைது செய்துள்ளனர். இப்போது அவர்களின் மோசடிகள் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூஸ்டர் டோஸை செலுத்திக்கொண்ட பைடன்