வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. கனமழைக்கு வாய்ப்பா?

Siva
புதன், 1 அக்டோபர் 2025 (10:50 IST)
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தற்போது, அந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி, அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று, இன்னும் சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அக்டோபர் மூன்றாம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதனை தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாகத் தமிழகம் உட்பட கடலோர மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments