Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

Advertiesment
Child Murder

Prasanth K

, திங்கள், 4 ஆகஸ்ட் 2025 (10:14 IST)

தமிழ்நாட்டில் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய அளவில் பார்க்கும்போது குழந்தை பிறப்பு விகிதாச்சாரம் அதிகமாக இருந்தாலும் தமிழக அளவில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது 2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு 6.09 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறாக ஒரு குறிப்பிட்ட மொழி மக்களின் பிறப்பு விகிதம் குறைவது எதிர்காலத்தில் தேசிய அளவிலான அவர்களது பிரதிநிதித்துவத்தை மிகவும் பாதிக்கும் ஒன்றாக அமையும்.

 

தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு, அதை கொண்டு சீரமைக்கப்படும் நாடாளுமன்ற தொகுதிகள் என தமிழகத்தை நோக்கி பல பிரச்சினைகள் உள்ள நிலையில், எதிர்காலத்தில் தமிழக மக்களின் எண்ணிக்கை குறைவது பாதிப்பை ஏற்படுத்தும். 

 

அதேசமயம் பிறப்பு விகிதம் குறைவதற்கு காரணம் திருமணங்கள் பெருமளவில் குறைந்துள்ளதால் என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர். தற்கால பெண்களின் மிகை எதிர்பார்ப்புகளும், அதிக அளவில் திருமணமாகாத முதிர் ஆண்கள் அதிகரித்து வருவதும் கூட ஆபத்தானவையே என்றும், இவையெல்லாம் குறித்து மாநில அரசு ஆய்வு செய்து மனிதவள மேம்பாட்டில் கூடுதல் அக்கறை மிகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

 

சீனாவில் மக்கள் தொகையை குறைக்க பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த முயன்று, தற்போது எதிர்காலத்தில் முதியவர்கள் அதிகமாவதை தவிர்க்க காதலிக்க கல்விமுறை, திருமணம் செய்ய சலுகை, குழந்தைகள் பெற்றால் பரிசு என மக்களை ஊக்கப்படுத்த பல வழிமுறைகளை கையாண்டு வருகிறது. தமிழகத்திலும் அந்நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது பலரது எண்ணம்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!