Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமண விழாவில் நடனமாடியவர் திடீரென மாரடைப்பால் மரணம்.. மணமக்கள் அதிர்ச்சி..!

Advertiesment
திருமணம்
, வியாழன், 11 மே 2023 (12:07 IST)
திருமண விழாவில் நடனமாடி கொண்டிருந்தவர் திடீரெனம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்  அடைந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் பலோட் என்ற மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது மேடையில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பஞ்சாபி பாடலுக்கு உறவினர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார். 
 
அப்போது அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் நெஞ்சை பிடித்து கீழே விழுந்தார். இதனை அடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனார். 
 
நடனமாடிய போது உடலுக்கு அதிக ரத்தம் தேவைப்பட்டதாகவும் இதயத்துடிப்பு அதிகரித்ததன் காரணமாக ரத்த குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மணமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசுக்கே அதிகாரம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!