Publish Date: Mon, 08 May 2023 (18:34 IST)
Updated Date: Mon, 08 May 2023 (18:40 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணம் நிச்சயமான ஜோடி ஒன்று ஒரு ஹோட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சன்வர் சாலை என்ற பகுதியில் வசித்து வந்தவர் கபில் சாகு(25). சமீபத்தில் இவருக்கு நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் செய்வது என நிச்சயிக்கப்பட்டது.
இந்த நிலையில், கபில் தன் பெற்றோரிடம் கூறிவிட்டு, காலையில் விஜய் நகர் பகுதிக்குச் சென்றார். பின்னர், மதியம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், கபிலின் தந்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.
ஆனால் போனை எடுக்காததால், கபிலின் தந்தை மற்றும் உறவினர்கள் மாலையில் சம்பவ இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, ஓட்டல் கதவை ஊழியர்கள் உதவியுடன் திறந்து அறைக்குள் சென்றபோது, கபில் மற்றும் நிஷா இருவரும் சுய நினைவற்று கிடந்தனர்.
அவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.