50 ஆண்டுகள் கழித்து ஏப்ரல் மாதத்தில் புயல் உருவாகி அது தமிழகத்தை நோக்கி வர உள்ளதாக, புயல் குறித்த சுவாரச்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகத்தில் புயல் கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கனமழை இருக்ககூடும். மேலும், தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 80% இந்த புயல் தமிழகத்தில் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது கார்றின் வேகம் பெரும்பாலும் 150 கிமீ இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தை நோக்கி புயல் வர உள்ளதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் உருவான புயல் மட்டுமே தமிழகத்தை தாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் ஏப்ரல் இறுதியில் உருவாகும் புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும், இன்னும் 24 மணி நேரத்திற்கு பிறகே எந்தெந்த மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.