சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

Mahendran
புதன், 26 நவம்பர் 2025 (10:34 IST)
மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 'சென்யார்' புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த இந்த சின்னம், நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, இன்று காலை புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது.
 
இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்திற்குத் தீவிரத்துடன் இருக்கும் என்றும், அதன் பிறகு படிப்படியாக வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து இன்று இந்தோனேசியா கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
'சென்யார்' புயலின் நகர்வால் தமிழகத்திற்கு எந்தவித நேரடி பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கை அருகே உருவாகும் மற்றொரு காற்றழுத்த தாழ்வு சின்னம் ஒன்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து, தமிழகத்திற்கு மழையை கொடுக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

அடுத்த கட்டுரையில்
Show comments