கடந்த சில நாட்களாக டிட்வா புயல் காரணமாக சென்னையில் மிதமான மழை முதல் கன மழை பெய்து வந்தது என்பதும் மழையின் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி சாலைகள் பழுதடைந்தன என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் டிட்வா புயல் முற்றிலும் வலு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. வட தமிழ்நாட்டில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 27ஆம் தேதி டிட்வா புயல் உருவாகி இலங்கை, தமிழ்நாட்டில் பரவலாக கன மழையை கொடுத்த நிலையில் முற்றிலும் வலுவிழந்ததால் சென்னையில் இன்று காலை முதல் வெயில் அடித்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின் சூரிய ஒளியை பார்க்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.