Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிக்கையாளர் சேவை மையத்தில் இந்தியில் மட்டுமே பதில்.. டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!

Mahendran
வியாழன், 13 மார்ச் 2025 (14:42 IST)
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு  நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவதாகவும் இது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப்பதாவது:
 
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு  இண்டேன், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் ஆகியவற்றின்  வாடிக்கையாளர் சேவை மையத்திற்கான இலவச தொலைபேசி அழைப்பில் (1800 2333 555) தொடர்பு கொண்டு பேசும் போதெல்லாம் இந்தியில் மட்டுமே பதிலளிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுவும் ஒரு நவீன இந்தித் திணிப்பு தான். இதை அனுமதிக்க முடியாது. 
 
தமிழ்நாட்டில் வணிகம் செய்யும் இந்த நிறுவனங்கள் தமிழ் மொழியில் சேவை வழங்க வேண்டும். இலவச தொலைபேசி அழைப்பைத் தொடர்பு கொள்பவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பதில் அளிக்கும் வாய்ப்பு இருக்கும் போதிலும் கூட, இந்தியில் மட்டும் தான் பதில் அளிக்கப்படுகிறது. தமிழில் உரையாட வேண்டும் என்று தெரிவித்தால் மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறி அழைப்பு துண்டிக்கப்படுகிறது. 
 
இதைத் திட்டமிட்ட இந்தித் திணிப்பாகவே பார்க்க வேண்டும்.தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பதிலளிக்க மறுப்பதை எண்ணெய் நிறுவனங்கள் நியாயப்படுத்த முடியாது. தமிழில் சேவை வழங்காமல் இந்தியில் மட்டுமே சேவை வழங்குவதற்காக எரிவாயு நிறுவனங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்த வேண்டும்.
 
இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதிகளை திருமணம் செய்த 60 பாகிஸ்தான் பெண்கள் நாடு கடத்தல்.. இந்தியா அதிரடி..!

ஜாதி வாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசே நடத்தும்.. அமைச்சரவையில் ஒப்புதல்..!

மோடி திரும்ப திரும்ப அதே தவறை செய்கிறார்! போர் சூழல் குறித்து பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கருத்து!

10 பயங்கரவாதிகளை சுட்டு கொன்ற பாகிஸ்தான் பாதுகாப்பு படை.. இந்தியாவை சமாதானப்படுத்தவா?

கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி: முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments