மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி அரசு பணிக்கான தேர்வுகள் மராத்தி மொழியிலும் நடத்தப்படும் என முதல்வர் தேவேந்திர பட்டினின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஆர். எஸ். எஸ். தலைவர் ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் தேவேந்திர பட்டினர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, "மகாராஷ்டிரா மற்றும் மும்பையின் மொழி மராத்திதான். இங்குள்ள அனைவரும் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்," என்று தெரிவித்தார்.
மேலும், மகாராஷ்டிராவில் அரசு பணியாளர்கள் தேர்வாணைய தேர்வுகள் இனி மராத்தி மொழியிலும் நடத்தப்படும் என்றும், அதேசமயம், ஆங்கிலத்திலும் நடைபெறும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், சில வேளாண் பொறியியல் தொடர்பான தேர்வுகள் மட்டும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பொறியியல் படிப்புகளை மராத்தி மொழியிலும் நடத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும், இனிமேல் பொறியியல் தேர்வுகளும் மராத்தி மொழியில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.