Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் நர்ஸ் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

Mahendran
வியாழன், 13 மார்ச் 2025 (14:37 IST)
சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விரும்பும் பெண் நர்ஸ்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, B.Sc நர்சிங் முடித்த 35 வயதிற்குள் உள்ள நர்ஸ்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். Data Flow, HRT சான்றிதழ்கள் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
 
பணியாளர் நலன் & நேர்காணல் விவரங்கள்
 
* உணவு, விடுதி, விமான பயணச்சீட்டு உள்ளிட்டவைகளை சவூதி அரசு வேலை வழங்குபவர்கள் ஏற்பாடு செய்து தருவார்கள்.
 
*  நேர்காணல்: 27.04.2025 முதல் 30.04.2025 வரை கொச்சியில் நடைபெறும்.
 
விண்ணப்பிப்பது எப்படி?
 
விண்ணப்பதாரர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும்.  தேவையான சான்றிதழ்கள், பாஸ்போர்ட், அனுபவச் சான்றிதழ்களை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 18.04.2025க்குள் அனுப்ப வேண்டும்.   கூடுதல் தகவல்களுக்கு 63791-79200, 044-22502267 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 
இந்த வேலைவாய்ப்புக்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது தனிப்பட்ட ஏஜென்டுகளோ இல்லை.  வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கே நேரடியாக பதிவு செய்யலாம்.  தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களிடம் சேவைக் கட்டணமாக ரூ. 35,400 மட்டுமே வசூலிக்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் வழங்கப்பட்ட தகவல்களை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments