Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துச்சா இல்லையா?. சிடி நிர்மல் குமார்.. ஆதவ் அர்ஜுனா. யார் சொல்வது உண்மை?..

Advertiesment
ct nirmal kumar
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. இத்தனைக்கும் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என விஜய் கட்சி தொடங்கிய உடனே அறிவித்தார். ஆனாலும் அரசியல் கட்சிகள் தவெக பக்கம் செல்ல ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முக்கிய காரணம் தவெக ஆட்சி அமைக்கும் என அவர்கள் நம்பவில்லை. அதனால்தான் அதிமுக, திமுக என கூட்டணி அமைத்துவிட்டனர்.

ஒருபக்கம் விஜயை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் பாஜக தலைமை இறங்கியதாக செய்திகள் வெளியானது. விஜய்க்கு துணை முதல்வர் பதவி மற்றும் 60 தொகுதிகள வரை கொடுக்கிறோம் என தவெகவிடம் பாஜக பேரம் பேசியதாக செய்திகள் கசிந்தது.

ஆனால் இந்த தகவலை இந்த கட்சியின் துணைப்பொதுச்செயலளர் சிடி நிர்மல்குமார் மறுத்தார்..தவெக எந்த கட்சியுடன் கூட்டணி பேசவில்லை என அவர் அதில் கூறியிருந்தார். ஆனால், நேற்று பெரம்பூரில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘தவெகவிடம் பலரும் பேசினார்கள். கூட்டணிக்கு கூப்பிட்டார்கள்.. 90 தொகுதிகள் மற்றும் விஜய்க்கு முதலமைச்சர் பதவி கொடுக்க முன் வந்தார்கள்.. ஆனால் நாங்கள் டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்’ என கூறினார்.

தவெக யாருடணும் கூட்டணி பேசவே இல்லை என சிடி நிர்மல் குமார் கூறினார். ஆதவ் அர்ஜுனாவோ இப்படி சொல்லியிருக்கிறார். எனவே, சிடி நிர்மல் குமார் சொன்னது உண்மையா? இல்லை ஆதவ் அர்ஜினா சொல்வது உண்மையா என்கிர குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. திமுக ஆதரவாளர்கள் இதை விமர்சித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடிவேல் காமெடி உண்மையாயிடுச்சே!.. அப்பாவை மூட்டைக்கட்டி கொரியரில் அனுப்பிய பெண்!..