Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

Mahendran
சனி, 29 ஜூன் 2024 (10:11 IST)
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக கொட்டியது என்பதும் இதனை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியபோதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி ஒரு இடத்தில் மட்டுமே குளிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் வரிசையில் நின்று ஏராளமான மக்கள் குளித்து வருகின்றனர்.
 
மேலும் பழைய குற்றாலம், ஐந்தறிவு ,புலி அருவி ஆகிய பகுதிகளில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அங்கு குளியலை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சனி ஞாயிறு விடுமுறை தினம்  என்பதால் இன்றும் நாளையும் குற்றாலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதை அடுத்து தென்காசி மாவட்ட நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது .
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments