Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

Mahendran
சனி, 29 ஜூன் 2024 (08:57 IST)
அண்மையில் ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் சற்றுமுன் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த யூ.ஜி.சி. நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. தேர்வுக்கு முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான தேதியும் வெளியாகி உள்ளது.
 
இந்த நிலையில் யூ.ஜி.சி. சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஜூலை 25 - ஜூலை 27 தேதிகளில் நடைபெறும் - தேசிய தேர்வு முகமை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதேபோல் யூ.ஜி.சி. நெட் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 21 முதல் செப். 4 வரை நடைபெறும்  என  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
ஒரு பக்கம் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் காங்கிரஸ் உள்பட சில கட்சிகள் நீட் தேர்வு குறித்த விவாதத்தை பாராளுமன்றத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் இந்த தேர்வுக்கான புதிய தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments