Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயினாவரம் சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கு – குண்டர் சட்டம் ரத்து

அயினாவரம் சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கு – குண்டர் சட்டம் ரத்து
, சனி, 12 ஜனவரி 2019 (08:30 IST)
அயினாவரம் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட 16 பேரின் மீதான குண்டர் தடை சட்டத்தை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்றில்  11 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணிபுரிந்து செக்யூரிட்டி, லிஃப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 17 பேரின் மீதும் மகளிர் நீதி மனறத்தில் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த 17 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் அவரது உறவினர்கள் ’கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் மற்றும் குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’ என மேல்முறையீடு செய்தனர்.

இதுதொடர்பான நேற்றைய விசாரணையில் ’குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையான குற்றம் செய்திருந்தால் கைது செய்த 30 நாளைக்குள் குண்டர் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கப்பட வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் மீது 45 நாட்களுக்குப் பிறகே குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதனால் அவர்கள் மீதான் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது’ என நீதிமன்றம் அறிவித்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி