Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் மேலும் ஒரு போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை? மன அழுத்தம் காரணமா?

சென்னையில் மேலும் ஒரு போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை? மன அழுத்தம் காரணமா?
, புதன், 7 மார்ச் 2018 (08:22 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏறபடுத்தியது

இந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை அயனாபுரம் கே-2 காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய 28 வயது சதீஷ் என்பவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்

சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் நேற்று வழக்கம் போல், இரவு பணிக்கு சென்று பணியை தொடர்ந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை தனக்கு தானே, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கடிதத்தில்  தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறை உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்ட கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு: பற்றி எரிகிறது பெரியார் சிலை விவகாரம்