Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

Senthil Velan
வியாழன், 4 ஜூலை 2024 (16:43 IST)
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவலை ஜூலை 8ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. 
 
தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

ALSO READ: அரசு நலத்திட்டங்கள் சரிவர கிடைக்கிறதா.? பயனாளிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 8ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43வது முறையாக நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனுக்கு நாற்காலி.. மாவட்ட ஆட்சியரை எழுந்திருக்க சொல்வதா? உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட அனுமதி: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் பிரச்சாரத்தில் AI டெக்னாலஜியை பயன்படுத்தலாமா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்.. 300 யூனிட் இலவச மின்சாரம்.. அதிரடி வாக்குறுதி..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments