Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருமல் மருந்தால் 21 குழந்தைகள் பலி: 'கோல்ட்ரிஃப்' உரிமையாளரை தமிழகம் வந்து கைது செய்த மத்திய பிரதேச காவல்துறை..!

Advertiesment
ஜி. ரங்கநாதன்

Siva

, வியாழன், 9 அக்டோபர் 2025 (08:14 IST)
ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்தை குடித்ததால் குறைந்தது 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்கள் தொடர்பாக, அந்த மருந்தை தயாரித்த  நிறுவனத்தின் உரிமையாளர் ஜி. ரங்கநாதன் என்பவரை மத்திய பிரதேச காவல்துறை குழு கைது செய்துள்ளது.
 
இது குறித்து சின்ட்வாரா காவல் கண்காணிப்பாளர் அஜய் பாண்டே கூறுகையில், "ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். அவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அங்கு நீதிமன்றத்திடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, அவர் மத்திய பிரதேசத்தில் உள்ள சின்ட்வாராவுக்கு கொண்டு வரப்படுவார்" என்று தெரிவித்தார்.
 
ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' இருமல் சிரப்பில் நச்சுத்தன்மை இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் முன் தவெக கொடியை உயர்த்தி காட்டிய தொண்டர்கள்.. கூட்டணி உறுதியாகிவிட்டதா?