Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்கக்கூடியது - முதல்வர் பழனிசாமி

Advertiesment
கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்கக்கூடியது - முதல்வர் பழனிசாமி
, சனி, 4 ஏப்ரல் 2020 (17:08 IST)
கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்கக் கூடியது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  உலக அளவில் கொரோனாவால், 11.30 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். 2.34 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.உலகில் இதுவரை 60,107 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 2902  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மஹாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, மும்பையில் 28 பேருக்கும்,  தானேவில் 15 பேருக்கு புதியாக  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம் 411 கொரோனா பாதிப்புகளுடன் கொரோனா பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் , 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது :

கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்கக் கூடியது.  அதனால் கொரோனா விஷயத்தில் மதச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் என  முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லைட் ஆஃப் பண்ணா போதும்.. ஏசி, ஃப்ரிஜ் எல்லாம் வேண்டாம்: மத்திய அரசு!