நாளை இரவு விளக்கு ஏற்றும்போது மின் விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும் என மத்திய அரசு அறிவுறுத்தல்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில் முதல் 10 நாட்கள் முடிவடைந்துள்ளது. இதனால் பிரதமர் மோடி நேற்று மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது, ஏப்ரல் 5 ஆம் தேதி மிகவும் முக்கியமான நாள் என்றும் அன்று இரவு 9 மணிக்கு மக்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அதற்கு பதிலாக டார்ச் லைட், அகல் விளக்குகள் அல்லது மெழுகுவர்த்திகளை ஏற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்சினை ஏற்படும் எனவே மின் விளக்குகளை மட்டும் அணைக்குமாறு தமிழக மின்வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, நாளை இரவு விளக்கு ஏற்றும்போது மின் விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும். கணினிகள், மின் விசிறிகள், ஏசி, தெரு விளக்குகள், டிவி உள்ளிட்டவற்ற அணைக்கத் தேவையில்லை.
அதேபோல மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள் உள்ளிட்டற்றில் விளக்குகள் அணைக்கத் தேவையில்லை என கூறப்படுள்ளது.