Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

500 ரூவா நிதி கொடுத்தவர் விஜய்.. இவர்தான் தமிழ்நாடா?!. திமுக பிரபலம் கோபம்!..

Advertiesment
vijay

Mahendran

, திங்கள், 23 பிப்ரவரி 2026 (17:02 IST)
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி வருகிற சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருக்கிறார். இந்த தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே விஜயின் எண்ணமாக இருக்கிறது. ஒருபக்கம், தவெக தனித்துப் போட்டியிட்டாலே 18 சதவீத வாக்குகளை பெறும் என சில கருத்துக்கணிப்புகள் சொல்கிறது.

ஒருபக்கம், இதுவரை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியும் தவெகவுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. இது பலவீனமாக பார்க்கப்பட்டாலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில், தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்று சக்தியாக தவெக உருவாகியிருக்கிறது.

இன்று வேலூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் ‘என்னை பலரும் நக்கலடிக்கிறார்கள். மோசமாக விமர்சிக்கிறார்கள் அவர்களுக்கு நான்தான் தமிழ்நாடு என்று தெரியவில்லை.. மக்களின் முகமாகத்தான் நான் இருக்கிறேன்.. மக்களுக்காகத்தான் நான் பேசுகிறேன்.. என்னை திட்டினால் மக்களை திட்டுவதாக அர்த்தம்.. என்னை கிண்டல் அடித்தால் மக்களை கிண்டலடிப்பதாகவே அர்த்தம்.. எனக்கு அரசியல் தெரியாது என்றால் மக்களுக்கு அரசியல் தெரியாது என அர்த்தம்.. என்னையும் மக்களையும் பிரிக்கவே முடியாது.. நானும் மக்களும் பிரிக்க முடியாத ரத்த சொந்தம்’ என பேசியிருந்தார்.

இந்நிலையில், விஜய் அப்படி பேசியது பற்றி கருத்து தெரிவித்த திமுக மூத்த தலைவர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ‘நான்தான் தமிழ்நாடு.. தமிழ்நாடுதான் நான் எனது விஜய் சொல்கிறார்.. தன்னைச் சுற்றி தமிழ்நாடு இயங்குகிறது என்கிற மனநிலையில் விஜய் இருக்கிறார்.. 2009ம் வருடம் இலங்கையில் இன அழிப்பு நடந்த போது திரை உலகில் நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து நிதி திரட்டினார்கள். சாதாரண சின்ன சின்ன கலைஞர்கள் கூட 5 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தார்கள்.. ஆனால் விஜய் கொடுத்தது வெறும் 500 ரூபாய். இதுதான் இனப்பற்றா?.. இதற்குதான் தமிழ்நாடு உங்கள் பின்னாடி நிற்குமா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதெல்லாம் விஜயின் பலம்!.. பிரிச்சி மேயும் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன்!..