காங்கிரஸிடனான கூட்டணியில் திமுக முதல்வர் பதவி கேட்பதால் புதுச்சேரியில் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என அறிவித்ததை அடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளதால் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்கிறது. அதே சமயம் கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, சட்டமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல பாஜக, அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில், திமுக அதிக இடங்களை கேட்டதாகவும் இல்லையென்றால் முதலமைச்சர் பதவியை வேண்டும் என கேட்பதாலும் காங்கிரஸ் கலக்கமடைந்துள்ளது.