Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் - அதிமுக தேர்தல் வாக்குறுதி!!

Advertiesment
6 cylinders per year free
, திங்கள், 8 மார்ச் 2021 (20:33 IST)
குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் குடும்பத்தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தனது பரப்புரையில் தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி  தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் குடும்பத்தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்தபின்னர் அதிமுக கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படும் எனவும் மேலும்  பட்டியல் வெளியாகிவிடும்  எனத் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!!