Publish Date: Mon, 08 Mar 2021 (17:07 IST)
Updated Date: Mon, 08 Mar 2021 (17:46 IST)
அமமுக கூட்டணி பற்றி இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்
பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உண்மையான கூறியுள்ளதாவது :
உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான். மக்களின் பேராதரவுடன் தமிழகத்தின் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்., அதர்மத்தையும், தீயசக்தி கூட்டத்தையும் வரும் சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி அமமுக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,அமமுக கூட்டணி பற்றி இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.