Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Pub-ல் Pappu... காங். விளக்கம்!

Pub-ல் Pappu... காங். விளக்கம்!
, புதன், 4 மே 2022 (10:08 IST)
ராகுல் காந்தி பார்ட்டி வீடியோ குறித்து காங்கிரஸ் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

 
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த 2019 aaம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதை தொடர்ந்து காங்கிரஸ் சரியான தலைமை இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் கடும் தோல்வியை தழுவியது.
 
குஜராத்தை மீது ராகுலுக்கு அலட்சியமா? 
இதனைத்தொடர்ந்து நடக்க உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் ஆயத்தம் ஆகி வருகிறது. குஜராத்தில் மே 1 ஆம் தேதி ராகுல்காந்தி கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டம் நடத்தப்பட இருந்த நிலையில் ராகுலின் அனுமதி கிடைக்காததால் அது 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில் ராகுல்காந்தி நேபாளத்தின் காத்மண்டுவில் சீன வெளியுறவு துறை அதிகாரி உள்ளிட்ட சிலரோடு பப் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ள வீடியோ வைரலாகியது. முன்னதாக ஏப்ரல் 4 ஆம் தேதி குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் காங்கிரஸ் நடத்திய நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
webdunia
இப்படி தொடர்ச்சியாக குஜராத் சார்ந்த விஷயங்களை ராகுல்காந்தி அலட்சியப்படுத்தி வருவது குஜராத் காங்கிரஸாருக்கே அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பார்ட்டி வீடியோ குறித்து பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் இன்னமும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்காமல் இருந்த நிலையில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
மோடி போல இல்லை ராகுல்: 
காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா இது குறித்து கூறியதாவது, ராகுல் ராகுல் காந்தி நேபாளில் உள்ள தனது நண்பரின் திருமண விழாவிற்காக சென்றிருந்தார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் திருமண விழாவில் பங்கேற்பது நமது கலாசாரம் மற்றும் பண்பாடு. இது ஒரு குற்றம் கிடையாது. 
 
இனி நண்பர்களின் திருமண விழாவில் பங்கேற்பதுகூட குற்றம் என பாஜக அறிவிக்கக் கூடும் போல. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்தநாள் கொண்டாடவும், கேக் வெட்டவும் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சென்றது போல் ராகுல் காந்தி அழைக்கப்படாத விருந்தாளியாக செல்லவில்லை என்று விளக்கமளித்திருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்சய திருதியை முடிந்தவுடன் உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை!