காங்கிரசை பொருத்தவரை கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் திமுக இதுவரை பங்கு கொடுத்தது இல்லை. காங்கிரஸும் கேட்டதில்லை. ஆனால் இனிமேல் எங்களுக்கும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் போர்க்கடி தூக்க துவங்கியிருக்கிறது.. கடந்த சில நாட்களாகவே பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ன்கிற கருத்தை முன்வைக்க துவங்கிவிட்டனர்.
ஒருபக்கம் திமுக தாங்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்கலாம் எனவும் காங்கிரஸ் யோசித்து வருவதாக தெரிகிறது. ஏற்கனவே காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்து விஜயை சந்தித்து பேசினார். அதேபோல் ஜனநாயகன் விஷயத்திலும் காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஜனநாயகனுக்கு ஆதரவாகவும் மோடிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
எனவே வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைக்குமா என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. இதை திமுக தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்பாரா இல்லையா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
தவெக பக்கம் சென்றால் கண்டிப்பாக திமுக கொடுப்பதை விட அதிக தொகுதிகளை வாங்க முடியும். அதேபோல் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்க முடியும், பாஜகவுக்கும் டஃப் கொடுக்க முடியும் என காங்கிரஸ் இணைப்பதாக தெரிகிறது.