Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காணாமல் போன கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு... நண்பர்களே கொலை செய்து புதைத்தது அம்பலம்..!

Advertiesment
காணாமல் போன கல்லூரி மாணவர் சடலமாக மீட்பு... நண்பர்களே கொலை செய்து புதைத்தது அம்பலம்..!
, ஞாயிறு, 26 மார்ச் 2023 (14:50 IST)
தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் அவரை அவரது நண்பர்களே கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி என்ற பகுதியைச் சேர்ந்த ஜெகன்ஸ்ரீ என்ற தனியார் கல்லூரி மாணவர் திடீரென காணாமல் போனார். இதனை அடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்தனர்
 
இந்த நிலையில் ஜெகனின் நண்பர்கள் 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது அவர்கள் தான் ஜெகனை கொலை செய்தது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக மது போதையில் ஜெகனை அடித்து கொலை செய்துவிட்டு வனப்பகுதியில் புதைத்ததாக நான்கு பேரும் ஒப்புக்கொண்டனர். 
 
இதனை அடுத்து நான்கு பேரை கைது செய்த போலீசார் ஜெகனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வல்லவனுக்கு டூத் ப்ரஷும் ஆயுதம்; சுவரைத் துளைத்து சென்ற கைதிகள்!