Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்லைன் ரம்மியால் பண இழப்பு: தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை..!

ஆன்லைன் ரம்மியால் பண இழப்பு: தமிழகத்தில் மேலும் ஒருவர் தற்கொலை..!
, சனி, 25 மார்ச் 2023 (12:27 IST)
ஆன்லைன் ரம்மியால் லட்ச கணக்கில் பணத்தை இழந்து பத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் ஆன்லைன் ரம்மியால் நஷ்டம் அடைந்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருவரம்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில வாரங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்த நிலையில் அதில் பெரும்பாலான பணத்தை இழந்து உள்ளார். 
 
இதனை அடுத்து ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட பண இழப்பு மற்றும் கடன் தொல்லை ஆகியவை காரணமாக அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆன்லைன் ரம்மி தடை  மசோதா சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு நேற்றுதான் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஸ் சிலிண்டர் மானியம் ரூ.200 என அதிகரிப்பு.. தமிழகத்தில் 35 லட்சம் பேர் பயனடைவர்..!