கழிவறையில் பெண் ஊழியர்களை ஆபாச வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

Siva
வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (14:10 IST)
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில், சக பெண் ஊழியர்களை கழிப்பறையில் மொபைல் போனில் வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
மின்சார வாரிய அலுவலகத்தில் இளநிலை கணக்காளராக பணிபுரியும் 24 வயது பெண் ஊழியர், அலுவலக கழிப்பறையைப் பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது, அதே அலுவலகத்தில் வணிகப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரியும் ராஜராஜேஸ்வரன் என்பவர், கழிப்பறையின் ஜன்னல் வழியாக அவரை வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
அந்த பெண் அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற ஊழியர்களிடம் அவர் நடந்ததை கூறி அழுதுள்ளார். உடனடியாக, இந்த சம்பவம் குறித்து செயற்பொறியாளர் ஜெயலெட்சுமியிடம் புகார் அளிக்கப்பட்டது.
 
ராஜராஜேஸ்வரனின் மொபைல் போனை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற பல பெண் ஊழியர்களின் ஆபாசப் படங்களும் வீடியோக்களும் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
 
இதையடுத்து, பெண் ஊழியரின் புகாரின் பேரில், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜராஜேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மற்ற ஊழியர்களையும் இதுபோல படம் எடுத்துள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments