Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பேச்சு !

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பேச்சு !
, வியாழன், 9 ஏப்ரல் 2020 (14:56 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்திற்குப்  பின் முதல்வர் செய்தியாளர்களுக்கு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :

விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது  கொரொனா  பாதிப்பை மறைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் 3 ஆம் நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது.  தமிழகத்தில்   738 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 19 ஆய்வகங்கள் உள்ளன.3371 வெண்டிலேட்டர்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. தமிழகத்தில் கொரொனா தொற்று 3 வது நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. ஊரடங்கை மீறிய 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன.முகக்கவசம், பரிசோதனைக் கருவிகள் , உபகரணங்கள் அரசிடம் போதுமான அளவில் உள்ளனர்.

கொரொனா தடுப்புக்காக அமைக்கப்பட்ட 12 குழுக்கழுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பின் முதல்வர் ஒவ்வொரு குழுவும் சிறப்பாக செயல்படுவதாக பேட்டியளித்தார்.

மேலும், 1,20 லட்சம் பட்டாசு தொழிலாளார்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்படும். சென்னையில் பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் உயிரிழக்கும் காவலர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ. 40 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக  என  முதல்வர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம் – முதல்வர் அதிரடி