Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டியது அவசியம் – முதல்வர் அதிரடி

Advertiesment
It is necessary to write the Class 10 general election - CM Action
, வியாழன், 9 ஏப்ரல் 2020 (14:38 IST)
கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.  

இந்நிலையில் இன்னும் நடத்து முடிக்கப்படாமல் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஏப்.14க்கு பிறகே முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  

இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னரே, சூழ்நிலையை பொறுத்தே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்திற்குப் பின் முதல்வர் செய்தியாளர்களுக்கு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

அவர், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வேண்டி...யது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்து பணிகளுக்குமான அடிப்படையாக உள்ளது;  10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 
அதனால் கிடைத்துள்ள விடுமுறையை மாணவர்கள் அனைவரும் தேர்வுக்காகக் பயன்படுத்த  வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள்...2,500 வென்டிலேட்டர்கள் வாங்க உத்தரவு - முதல்வர் தகவல்!!