Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல, மதவாதத்திற்கு தான் எதிரானவர்கள்: முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
Stalin
, வியாழன், 5 ஜனவரி 2023 (20:01 IST)
நாங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் மதவாதிகளுக்கு தான் எதிரானவர்கள் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசியுள்ளார். 
 
சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது மதவாதத்திற்கு தான் நாங்கள் எதிரானவர்களே தவிர மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்கக்கூடாது என்றும் அதனால்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
எங்களை ஏளனமும் விமர்சனமும் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு இந்த விழாவும் மேடையும் சான்று என்று அவர் தெரிவித்துள்ளார். கோயில் திருப்பணிக்காக ரூபாய் 50 கோடி நிதி வழங்கும் இந்த விழாவில் முதல்வரின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக் விற்பனை நேரம் குறைக்கப்படுகிறதா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!