Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈ.வெ.ரா.திருமகன் எம்.எல்.ஏ மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஈ.வெ.ரா.திருமகன் எம்.எல்.ஏ மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
, புதன், 4 ஜனவரி 2023 (16:03 IST)
முன்னாள் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்  இளங்கோவன் மகனும், ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  ஈவேரா  திருமகன் இன்று  உடல் நலக்குறைவால் காலமானார்.

இவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஒரு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

''ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. ஈ.வெ.ரா. திருமகன் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத் தந்தையார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எனப் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஈ.வெ.ரா. திருமகன் அவர்கள் 2021-ஆம் ஆண்டுதான் முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீது மரியாதையோடும் அவர் நடந்துகொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்து வந்தவர் ஈ.வெ.ரா. திருமகன் அவர்கள்.

ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக் கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது.

தனது அன்புமகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவன் அவர்களை எப்படி தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்.

ஈ.வெ.ரா. திருமகன் அவர்களின் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயரமா இருந்தா இவ்ளோ பிரச்சினையா? உலகின் உயரமான மனிதன் சந்திக்கும் சிக்கல்