Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்னாவிஸா? தாக்கரேவா? முதல்வர் பதவியில் சிக்கல்

பட்னாவிஸா? தாக்கரேவா? முதல்வர் பதவியில் சிக்கல்

Arun Prasath

, சனி, 26 அக்டோபர் 2019 (09:23 IST)
மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி தேவேந்திர பட்னாவுஸ்கா? ஆதித்யா தாக்கரேவுக்கா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் தேதி, மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், 288 தொகுதியில் 161 இடங்களை கைப்பற்றி பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.

164 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 105 இடங்களிலும், 124 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு தற்போது யார் முதல்வர் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக தேவேந்திர பட்னாவிஸே முதல்வர் என்று தேர்தலுக்கு முன்பு பாஜக அறிவித்திருந்தது.

ஆனால் முதல் மந்திரி பதவியை ஆதித்யா தாக்கரேவுக்கும் பிரித்து தரவேண்டும், அதாவது இரு கட்சிகளும் தலா 2 ½ ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு பாஜகவினர் தயாராக இல்லை என கூறப்படுகிறது. மேலும் 2 ½ ஆண்டுகள் ஆட்சியை பகிர்ந்துகொள்தல் என்பது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். இது குறித்து உத்தவ் தாக்கரேவுடன் பாஜகவினர் கலாந்தாலோசிக்கவுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் சிவசேனாவுடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைக்குள் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்த டெய்லர் – நண்பனேக் கொன்றதன் பின்னணி !