Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிக்குப் பின் பாஜகவிடம் பேரம் பேசும் சிவசேனா!

வெற்றிக்குப் பின் பாஜகவிடம் பேரம் பேசும் சிவசேனா!
, வியாழன், 24 அக்டோபர் 2019 (21:01 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் இந்த கூட்டணிக்கு 160 தொகுதிகள் கிடைத்துள்ளது. இதில் காங்கிரஸ் 104 பகுதிகளிலும் சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சிவசேனாவின் ஆதரவு இல்லாமல் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளதால், இங்கு கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது உறுதியாகி உள்ளது. அது மட்டுமின்றி உத்தவ் தாக்கரே துணை முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இனி வரும் சட்டமன்றத் தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜகவுக்கு இணையான தொகுதிகளை கேட்டோம் என்றும், அதாவது 50 சதவீத தொகுதிகளை கேட்டோம் என்று சிவசேனா தரப்பினர் கூறி வருகின்றனர்
 
webdunia
ஏற்கனவே கடந்த மக்களவைத் தேர்தலின்போது சிவசேனாவிடம் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியபோது, வருங்காலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 சதவீத தொகுதிகளை பிரித்து கொடுக்க தயாராக இருப்பதாக கூறி இருந்ததாகவும், அதனை செயல்படுத்தும் நேரம் தற்போது வந்துவிட்டதாகவும் சிவசேனா கூறியுள்ளது 
 
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் சிவசேனா தற்போது 50 சதவீத தொகுதிகளை கேட்டு வாங்கினாலும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வளர்ந்துவிடும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகிய தங்கை மீது பொறாமை.. 189 முறை கத்தியால் குத்திக் கொன்ற சகோதரி !