Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன கேள்வி கேக்குறிங்க? நிருபரிடம் பொங்கிய முதல்வர் பழனிசாமி!

Advertiesment
என்ன கேள்வி கேக்குறிங்க? நிருபரிடம் பொங்கிய முதல்வர் பழனிசாமி!
, வியாழன், 19 நவம்பர் 2020 (07:31 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது ஒரு நிருபர் நீட் தேர்வில் 7.5% பெற்றதை நீங்கள் பெருமை பேசுகிறார்கள் என்று கூறியபோது முதலமைச்சர் பொங்கி எழுந்தார் 
 
நாங்கள் பெருமை பேசவில்லை, மாறாக பெருமைப்படுகிறோம். நீங்கள் தவறாக புரிந்து கொண்டு கேள்வி கேட்கின்றீர்கள் என்றும்,  ஒரு நிருபர் என்பவர் சரியாக கேள்வியை கேட்க வேண்டும் நீங்கள் தவறான கேள்வி கேட்கின்றீர்கள் என்றும், 7.5% என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? என்றும் பொங்கினார்.
 
மேலும் இதற்கு முன்னர் நடந்த ஆட்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ கல்லூரியில் சேர்த்தார்கள் என்று தெரியுமா? என்று காரசாரமாக முதல்வர் அந்த நிருபரிடம் கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் நான் கிராமத்திலிருந்து வந்தவன்,  அரசு பள்ளி மாணவர்கள் அதிகமாக மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததை நினைத்து நான் பெருமை பேச வில்லை, மாறாக நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியபோது முதல்வரை சுற்றியிருந்தவர்கள் கைதட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டே நாட்களில் பதவி பறிக்கப்படுகிறதா? பீகாரில் பெரும் பரபரப்பு