Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உயிரிழந்த விளையாட்டு வீரர் குடும்பத்திற்கு நிவாரணம்! – முதல்வர் அறிவிப்பு!

Advertiesment
உயிரிழந்த விளையாட்டு வீரர் குடும்பத்திற்கு நிவாரணம்! – முதல்வர் அறிவிப்பு!
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (11:41 IST)
கார் விபத்தில் பலியான விளையாட்டு வீரர் தீனதயாளன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் இழப்பீடு நிவாரணம் அறிவித்துள்ளார்.

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பிய்ன்ஷிப் போட்டிகள் மேகாலாயாவில் தொடங்கி நடைபெற உள்ளன. இதில் தமிழகம் சார்பாக தீனதயாளன் விஷ்வா உள்ளிட்ட 4 பேர் கலந்து கொள்வதற்காக அசாமில் இருந்து மேகாலயாவுக்கு காரில் சென்றுள்ளனர்.

மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் கார் சென்றுக் கொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மோதியதில் கார் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் விஷ்வா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் இளம் விளையாட்டு வீரர் தீனதயாளன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இழப்பீடு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை! – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!