தெரு நாய் கடித்து பத்தாம் வகுப்பு மாணவர் பரிதாப பலி.. தர்மபுரி அருகே சோகம்..!

Siva
வியாழன், 18 செப்டம்பர் 2025 (17:01 IST)
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே ஒரு தெருநாய் கடித்ததில், 10-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அரூர் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் தினேஷ், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவரை ஒரு நாய் கடித்தது. ஆனால், அதை தினேஷும் அவரது குடும்பத்தினரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 
இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தினேஷை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments