Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ரெண்டாகும் “ஒரு வார்த்தை” ட்வீட்! – நம்ம அரசியல் தலைவர்களின் “ஒரு வார்த்தை” என்ன?

ட்ரெண்டாகும் “ஒரு வார்த்தை” ட்வீட்! – நம்ம அரசியல் தலைவர்களின் “ஒரு வார்த்தை” என்ன?
, சனி, 3 செப்டம்பர் 2022 (09:34 IST)
ட்விட்டரில் உலகம் முழுக்க “ஒரு வார்த்தை” ட்வீட் வைரலாகி வரும் நிலையில் நம்ம அரசியல் தலைவர்களும் ஒரு வார்த்தையை பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் திடீரென ஒரு வார்த்தை ட்விட் வைரல் ஆகி வருவது டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆம்ட்ராக் என்ற ரயில் நிறுவனம் ட்ரெயின் என்ற ஒரே ஒரு வார்த்தையை ட்விட் செய்த நிலையில் பலரும் இதே போன்று ஒரே ஒரு வார்த்தையில் ட்விட் செய்து வருகின்றனர்.

வெளிநாட்டு தலைவர்கள் முதல் உள்நாட்டு தலைவர்கள் முதல் இந்த “ஒரு வார்த்தை” ட்ரெண்டிங்கில் களம் இறங்கியுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் “திராவிடம்” என்று பதிவிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “தமிழ்த்தேசியம்” என்றும், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “தமிழன்” என்றும் பதிவிட்டுள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் “சமூகநீதி” என பதிவிட்டுள்ள நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் “சனநாயகம்” என பதிவிட்டுள்ளார். அதிமுக ட்விட்டர் பக்கத்தில் ”எடப்பாடியார்” என பதிவிடப்பட்டுள்ள நிலையில், அமமுக டிடிவி தினகரன் “அம்மா” என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “மக்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் பல அரசியல் பிரபலங்களும் இந்த “ஒரு வார்த்தை” ட்ரெண்டிங்கில் பதிவிட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை திரும்பிய கோத்தபய; பங்களாவுக்கு பலத்த பாதுகாப்பு!