Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக அழகிரி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. வாசலுக்கு வந்து வரவேற்பு அளித்த குடும்பத்தினர்..!

Siva
ஞாயிறு, 1 ஜூன் 2025 (10:19 IST)
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னாள் தென் மண்டல பொறுப்பாளருமான மு.க. அழகிரியின் இல்லத்திற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு நேரில் சென்று சந்தித்தார்.
 
 2014-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் அரசியல் இருந்து ஒதுங்கியிருந்த அழகிரியுடன் ஸ்டாலின் நேரில் பேசியது, பல அரசியல் கணிப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
 
கடந்த ஆண்டு அழகிரி மகன் தயாநிதி அழகிரி உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார். அதேபோல், அமைச்சர் பதவியை ஏற்றபோது உதயநிதி ஸ்டாலினும் அழகிரியை வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்நிகழ்வுகள், அவர்களுக்கிடையிலிருந்த மனநிலை வேறுபாடுகள் குறைந்ததாக கூறப்பட்டது. 
 
இந்த நேரத்தில், மதுரையில் நடைபெற உள்ள திமுக மாநில பொதுக்குழுக் கூட்டம், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளுக்கான தொடக்கக் கூட்டமாகக் கருதப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக மு.க. ஸ்டாலின் அழகிரியை சந்தித்தது, கட்சியின் பிளவு நீங்கும் அறிகுறியாகவும், தென் மாவட்டங்களில் ஒரு புதிய அரசியல் சமநிலையை ஏற்படுத்தும் சூட்சும முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments