கொரோனா நிவாரண நிதி அளித்த சென்னை பல்கலை பணியாளர்கள்!
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. அதேபோல் கொரோனா வைரஸ் நிவாரன நிதியாகவும் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் வழங்கிவருகின்றனர். குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் ஆகியோரும் பெரும் தொகையை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக் கழக ஊழியர்கள் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை அளித்துள்ளனர். அனைத்துப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் 20 லட்சத்திற்கும் அதிகமாக வந்துள்ளதை அடுத்து அந்த பணத்தை தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கௌரி அவர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து அளித்தார்
கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சென்னை பல்கலைக் கழக பணியாளர்களின் ஒரு நாள் சம்பளம் தொகையான ரூபாய் 20,56,073ஐ முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது