Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மெட்ரோ ரயில் பணிகள்: ஆயிரம் விளக்கு பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் பணிகள்:  ஆயிரம் விளக்கு பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

Siva

, ஞாயிறு, 28 ஜனவரி 2024 (08:02 IST)
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதி  ஒயிட்ஸ் சாலையில் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று முதல் அதாவது 28.01.2024 முதல் ஒரு வார காலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
* பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை x திருவிக சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது
 
* ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஒயிட்ஸ் சாலையில் வரும் வாகனங்கள் பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
 
* அண்ணாசாலையிலிருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் ரோடு x ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
* அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஒயிட்ஸ் சாலை X திருவிக சந்திப்பில் இருந்து பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் இயக்கப்பட்டு ராயப்பேட்டை மணிக்கூண்டிற்கு சென்றடையும். 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிகச்சிறிய நாடான கத்தார் போரில் மத்தியஸ்தம் செய்வது எப்படி? இஸ்ரேல் பிரதமர் பேச்சால் சர்ச்சை