சென்னை மதுரை இடையிலான விமான கட்டணம் திடீரென மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் பொங்கல் விடுமுறை அடுத்து சென்னையில் இருந்து ஏராளமானோர் மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு செல்ல உள்ளனர்
ஏற்கனவே ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில் விமானங்களில் பயணம் செய்ய பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்
இந்த நிலையில் சென்னையிலிருந்து மதுரைக்கு 3800 ரூபாய் மட்டுமே இருந்த விமான டிக்கெட் தற்போது திடீரென 10,000 ரூபாய் ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆனால் இது குறித்து தகவல் அறித்த விமானத்துறை அதிகாரிகள் விமானத்தில் குறைந்த கட்டணம் நடுத்தர கட்டணம் மற்றும் அதிக கட்டணம் உடைய பல்வேறு கட்டணங்கள் விமானத்தில் உள்ளன என்றும் இதில் குறைந்த மற்றும் நடுத்தர கட்டணங்கள் டிக்கெட்டுகள் காலியாகிவிட்டதை அடுத்து தற்போது பத்தாயிரம் ரூபாய் அதிக கட்டணம் மட்டுமே காலியாக இருப்பதாகவும் விமான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்றும் விளக்கம் கூறியுள்ளனர்.