Publish Date: Fri, 24 Dec 2021 (18:57 IST)
Updated Date: Fri, 24 Dec 2021 (18:58 IST)
அமெரிக்காவில் திடீரென 200 விமானங்கள் திடீரென ரத்து செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஒருபக்கம் கொரோனா வைரசால் லட்சக்கணக்கானோர் தினமும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஒமிக்ரான் வைரஸால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி அமெரிக்காவுக்கு ஏராளமானோர் வருகை தர இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது
மேலும் ஒமிக்ரான் மற்றும் கொரோஅனவால் விமான நிறுவன ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் பாதிப்பு அடைந்திருப்பதால் விமான சேவைகளை நிறுத்தியதாக விமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது