கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வெள்ளம் சூழ்ந்ததால் டிசம்பர் 3, 4 தேதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் புறநகர் ரயில் நிலைய ரயில்கள் சேவையை பாதிக்கப்பட்டது.
இருப்பினும் வெள்ள பாதிப்பு குறைந்த பிறகு சென்னை சென்ட்ரல் - ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் வழி தடங்களில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் அதாவது டிசம்பர் 7 முதல் சென்ட்ரல் அரக்கோணம், கடற்கரை செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட உள்ளது.
சூலூர் பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி வழிதடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவொற்றியூரில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.