Publish Date: Thu, 18 Nov 2021 (16:19 IST)
Updated Date: Thu, 18 Nov 2021 (16:22 IST)
சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது சென்னையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.