Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்சார ரயில் மோதி 3 பேர் பலி - சென்னையில் அதிர்ச்சி

Advertiesment
மின்சார ரயில் மோதி 3 பேர் பலி - சென்னையில் அதிர்ச்சி
, திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (10:16 IST)
சென்னை கோடம்பாக்கம் அருகே மின்சார ரயில் மோதி மூன்று வாலிபர்கள் மரணமடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நேற்று இரவு கோடம்பக்கம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை 3 வாலிபர்கள் கடக்க முயன்றனர். அப்போது, அந்த பாதை வழியாக வேகமாக வந்த மின்சார ரயில் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் மீது மோதியது. இதில் அவர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இது தொடர்பான விசாரணையில், அவர்கள் கோடம்பாக்கம் பகுதியில் வசிக்கும் கார்த்தி, மனோஜ் மற்றும் பிரசாந்த் என்பதுதும், அவர்கள் குடிபோதையில் இருந்ததால், தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் வருவதை அவர்கள் கவனிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
 
இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் - முக்கிய முடிவு எடுக்கப்படுமா?