Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சன்னிலியோன் சென்னை வருகை! என்ன பாடு படப்போகின்றதோ

, வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (22:40 IST)
இந்திய பிரதமர் கொச்சிக்கு சென்றிருந்தால் கூட இந்த அளவுக்கு கூட்டம் இருந்திருக்காது. நேற்று கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கொச்சிக்கு வந்தபோது கடலலை போல் மனித அலைகள் தெரிந்தன. அவரை காரை சுற்றி ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டதால் கார் இன்ச் இன்ச் ஆக ஊர்ந்தது



 
 
சன்னிலியோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார் தனக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என்று. இந்த நிலையில் கொச்சியை கலக்கு கலக்கு என்று கலக்கிய சன்னிலியோன் அடுத்து சென்னைக்கு வரவுள்ளாராம்
 
பிரபல தயாரிப்பாளர் தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் 'இந்திரஜித்' படத்தில் சன்னிலியோன் ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளாராம். இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக சன்னிலியோன் சென்னைக்கு வெகுவிரைவில் வரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. கொச்சியில் குவிந்தது போல் சென்னையிலும் சன்னிலியோனை பார்க்க கூட்டம் குவிந்தால் சென்னை என்ன ஆகுமோ என்று இப்போதே பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'விவேகம்' புயலை கண்டு பயந்து ஓடிய படங்கள்