Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையையும் பதம் பார்த்த புளூவேல் கேம்: தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி

Advertiesment
சென்னையையும் பதம் பார்த்த புளூவேல் கேம்: தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி
, புதன், 23 ஆகஸ்ட் 2017 (05:01 IST)
புளூவேல் கேம் என்ற ஆன்லைன் விளையாட்டால் இதுவரை உலகில் சுமார் 1400 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மும்பை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் பலியாகியுள்ள நிலையில் தற்போது இந்த புளூவேல்கேம் சென்னை கல்லூரி மாணவி ஒருவரையும் பதம் பார்த்துள்ளது.



 
 
இந்த விளையாட்டின் ஆரம்பமே மிக கொடூரமானது. பிளேடால் கையை கிழித்து கொள்வது முதல் பல கொடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்ட கடைசி டாஸ்க் ஆக தற்கொலை வரை செல்லும். இந்த விளையாட்டுக்கு அடிமையான இளைஞர்களை காப்பாற்ற இந்த கேமை இந்தியாவில் தடை செய்ய மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
 
இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ப்ளூவேல் விளையாட்டை பல சுற்றுகள் விளையாடிள்ளார். இறுதியில் தற்கொலை டாஸ்க்கில் கலந்து கொள்ளும் நோக்கில் தான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் 7வது மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். தற்போது அந்த மாணவி மருத்துவமனையில் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. உயிரை கொல்லும் ஆபத்தான் இந்த விளையாட்டை உடனே தடை செய்ய வேண்டும் என்பது மட்டுமின்றி பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதையே இந்த சம்பவம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று புதுச்சேரி, நாளை பெங்களூரு: செம பிசியில் தினகரன்