சென்னையில் மெட்ரோ விபத்து.. L&T நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

Siva
வியாழன், 19 ஜூன் 2025 (08:39 IST)
சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் மேம்பால பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஐந்து நாட்களுக்கு முன் திடீரென மேம்பாலத்தின் தூண் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பாலத்திற்காக பொருத்தப்பட்டிருந்த இரும்பு உபகரணத்தில் வெல்டிங்கில் ஏற்பட்ட உடைப்புதான் விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
 
இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இந்தப் பாலத்தை கட்டிய ஒப்பந்த நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெட்ரோ மேம்பால கான்கிரீட் கீழே விழுந்ததில் ரமேஷ் என்பவர் உயிரிழந்த நிலையில், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கவனக்குறைவாக பணியாற்றிய நான்கு பொறியாளர்கள் மெட்ரோ திட்டப் பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் தலைமையிலான குழுவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்கு பின் வரியை குறைத்த டிரம்ப்.. எத்தனை சதவீதம்?

கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்க விவகாரம்! பொய் செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை! - நாமக்கல் காவல்துறை!

ஒரே காரில் பயணம் செய்த ஓபிஎஸ் - செங்கோட்டையன்.. அரசியல் பேசினார்களா?

தஞ்சை கூலி தொழிலாளி மனைவிக்கு ரூ.60.41 லட்சம் வரி நிலுவை.. நோட்டீஸை பார்த்து அதிர்ந்த குடும்பத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments